பருத்தித்துறையிலிருந்து மன்னாரிற்கு பேருந்து சேவை நேற்று வெள்ளிக்கிழமை (09) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பருத்தித்துறைச் சாலை முகாமையாளர் எஸ்.கந்தசாமி தெரிவித்தார்.
அரச உத்தியோகத்தர்களின் நலன்கருதி ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த பேருந்து சேவையானது அதிகாலை 5 மணிக்கு பருத்தித்துறையிலிருந்து புறப்பட்டு நெல்லிடி ஊடாக சாவகச்சேரி சென்றடைந்து தொடர்ந்து ஏ – 32 வீதி வழியாக மன்னாரைச் சென்றடையும் என அவர் தெரிவித்தார்.
பொதுமக்கள் அநேகரின் வேண்டுகோளிற்கிணங்கவே இந்த பேருந்து சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.