பருத்தித்துறைக்கு புதிய பிரதம பொலிஸ் பரீட்சகர்

பருத்தித்துறைப் பொலிஸ் தலைமைப் பீடத்திற்குப் புதிய பிரதம பொலிஸ் பரீட்சகராக ரி.எஸ்.மீடின் நேற்று ஞாயிற்றுக்கிழமை (03) நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் வட்டாரத தகவல்கள் தெரிவிக்கின்றன.

police-t-s-meeden

காங்கேசன்துறை விசேட குற்றத் தடுப்புப் பொறுப்பதிகாரியாக இதுவரைகாலமும் கடமையாற்றி வந்த மீடின், தற்போது, பருத்தித்துறைப் பொலிஸ் தலைமைப் பீட பிரதம பொலிஸ் பரீட்சகராக கடமையினைப் பொறுப்பேற்றுள்ளார்.

முன்னர், பருத்தித்துறைப் பொலிஸ் தலைமைப் பீடத்திற்கு பிரதம பொலிஸ் பரீட்சகராக 2011ஆம் ஆண்டு முதல் கடமையாற்றி வந்த ஏ.ஏ.டபிள்யு.ஜே.எஸ்.அபயகோன், பொலிஸ் தலைமையகத்தினால் கடந்த வியாழக்கிழமை (31) கண்டிக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இதனையடுத்தே புதிய அந்தப் பதவிக்கு மீடின் நியமிக்கப்பட்டுள்ளனார்.

இந்த நியமனம் வடமாகாணப் பிரதிப் பொலிஸ்மா அதிபர் பூஜித ஜெயசுந்தரவினால் மேற்கொள்ளப்பட்டதாக அந்தத் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

Related Posts