பரீட்சை மண்டபங்களில் இடம்பெறும் முறைகேடுகள் தொடர்பில் முறையிட புதிய மின்னஞ்சல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
தற்போது நடைபெற்று வரும் உயர்தரப் பரீட்சையின் முறைகேடுகள் தொடர்பில் முறையிட புதிய மின்னஞ்சல் முகவரியினை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
அதற்கமைய commissionerdoe@gmail.com என்ற மின்னஞ்சலினை பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
மேலும் குறித்த மின்னஞ்சல் மூலம் கிடைக்கும் முறைபாடுகளை 24 மணிநேரமும் ஆராய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் எம்.என்.ஜே.புஸ்பகுமார தெரிவித்துள்ளார்.
அத்துடன் 1911 , 0112 784208 , 0112784537 , 119 மற்றும் 01124211 என்ற தொலைபேசி இலக்கங்கள் ஊடாகவும் முறைபாடுகளை தெரிவிக்கலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பரீட்சை முறைகேடுகளை விரைவாக தெரிவிப்பதற்காகவே குறித்த மின்னஞ்சல் முகவரி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.