பரீட்சை மண்டபத்துக்கு செல்லும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய விடயங்கள்

க.பொ.த உயர்தர பரீட்சையில் தோற்றவுள்ள அனைத்து பரீட்சார்த்திகளும் பரீட்சை அனுமதி அட்டை, தேசிய அடையாள அட்டை அல்லது கடவுச்சீட்டு என்பவற்றை பரீட்சை நிலையத்துக்கு எடுத்து வருவது அவசியம் என பரீட்சை ஆணையாளர் நாயகம் டப்ளியு. எம்.என்.ஜே புஷ்பகுமார தெரிவித்துள்ளார்.

பரீட்சை நிலையத்துக்கு செல்ல முன்னர் தனது தகவல்கள் சரியாக உள்ளனவா என மாணவர்கள் ஆராய்ந்து பார்த்தல் அவசியம். தோற்றவுள்ள பாடம், மொழி, கால அட்டவணை என்பவற்றையும் மாணவர்ககள் சரிபார்த்து கொள்வதனூடாக காலதாமதங்களை தவிர்க்க உதவும் என ஆணையாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலதிக விபரங்கள் தேவைப்படுமாயின் பாடசாலை பரீட்சை ஏற்பாட்டுக்கிளைக்கு 0112784208/011 2784537ஆகிய இலக்கங்களினூடாக அல்லது 1911 என்ற உடனடி இலக்கத்தினூடாக தொடர்புகொண்டு பெற்றுக்கொள்ளலாம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related Posts