கிழக்கு மாகாணத்தில் முள்ளிப்பொத்தானையில் கல்விப் பொது தராதர சாதாரண பரீட்சை நிலையத்துக்கு சென்ற முஸ்லிம் மாணவிகளை பர்தா, ஹிஜாப் போன்றவற்றை கழற்றிவிட்டு வருமாறு தெரிவிக்கப்பட்ட சம்பவம் குறித்து நடவடிக்கை மேற்கொள்வதாக சுகாதார போசாக்கு மற்றும் சுதேச மருத்துவத்துறை அமைச்சரும் அமைச்சரவை துணைப்பேச்சாளருமான டொக்டர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கு செய்தியாளர் மாநாடு நேற்று பாராளுமன்ற கட்டடதொகுதியில் நடைபெற்றது.
முள்ளிப்பொத்தானை பரீட்சை மண்டபத்தில் நடைபெற்ற இந்த சம்பவம் தொடர்பாக செய்தியாளர் ஒருவர் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டுவந்தார் இதன்போது அமைச்சர் இந்தவிடயத்தை குறிப்பிட்டார்.
இந்த மாகாநாட்டில் கலந்துகொண்ட பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் ஊடகத்துறை பிரதி அமைச்சர் கருணாரத்ன பரணவிதான இதுதொடர்பாக தெரிவிக்கையில்:
இவ்வாறான உடைகளை அணிந்துகொண்டு பரீட்சை முறைகேடுகளில் ஈடுபட்ட சம்பவங்களும் உண்டு. இதனால் இதுதொடர்பில் கவனம் கொண்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.
ஊடகவியலாளர்: பர்தா, ஹிஜாப் போன்றவற்றைமாத்திரம் அன்றி மாணவர்களின் தாடிகளையும் வெட்டிவருமாறு வலியுறுத்தப்பட்டுள்ளனர். கிழக்கு மாகாணத்தில் புதிதாக ஆசிரிய நியமனம் பெற்ற முஸ்லிம் ஆசிரியர்களை சாறி அணிந்து வருமாறு வலியுறுத்தப்பட்டுள்ளனர். இது அரசாங்கத்தின் நிலைப்பாடா?
அமைச்சரும் அமைச்சரவை துணைப்பேச்சாளருமான டொக்டர் ராஜித சேனாரத்ன தெரிவிக்கையில் :இது அரசாங்கத்தின் நிலைப்பாடல்ல தகவல்களை தாருங்கள் நாங்கள் நடவடிக்கை எடுக்கின்றோம் என்று தெரிவித்தார்.