வௌ்ள அனர்த்தம் காரணமாக, நாளைய தினம் நடைபெறவிருந்த பொது நிர்வாக சேவை பரீட்சை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
இந்த பரீட்சையை நடத்துவதற்கான மற்றுமொரு தினம் தொடர்பில் இதுவரை தீர்மானிக்கப்படவில்லை என்றும், விரைவில் பரீட்சை தினத்தை அறிவிப்பதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.
சீரற்ற வானிலை காரணமாக நாட்டில் ஏற்பட்டுள் அனர்த்த நிலை தொடர்பில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் அலரி மாளிகையில் இன்று முற்பகல் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது, இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை நாளை நாளை மறுதினம் நடைபெறவிருந்த முகாமைத்துவ உதவியாளர் தரம் 111 பரீட்சை காலவரையின்றி பிற்போடப்பட்டிருப்பதாக உதவி பரீட்சைகள் ஆணையாளர் பிரணவதாசன் அறிவித்துள்ளார் குறித்த செய்திகள் தொடர்பில் பரீட்சை திணைக்களத்தையும் தொடர்பு கொண்டு கேட்ட போது தெரிவிக்கப்பட்டது அத்துடன் கல்வி அமைச்சால் ஒழுங்கு செய்யப்பட்ட சகல பரீட்சைகளும் பிற்போடப்பட்டுள்ளன என கல்வி அமைச்சும் அறிவித்துள்ளது