இவ் வருடத்தில் பரீட்சை பெறுபேறுகள் வௌியாகும் தினங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதற்கமைய, 2016ம் ஆண்டு டிசம்பர் மாதம் இடம்பெற்ற கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகள், இவ் வருடம் மார்ச் 28ம் திகதியும், இம்முறை இடம்பெறவுள்ள உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் டிசம்பர் 27ம் திகதியும் வௌியிடப்படவுள்ளன.
அத்துடன், ஐந்தாம் தரப் புலமைப் பரிசில் பரீட்சை முடிவுகள் ஒக்டோபர் 5ம் திகதி வௌியிடப்படும் என, கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.