குற்றம் சுமத்தப்பட்ட பிரத்தியேக வகுப்பு ஆசிரியர் இரசாயனவியல் வினாத்தாள் துண்டுப்பிரசுரத்தை பரீட்சைக்கு முன்பதாக வௌியிடவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வியமைச்சு வௌியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.
கம்பஹா பகுதியைச் சேர்ந்த சர்ச்சைக்குரிய ஆசிரியர் உட்பட அவரது உறவினர்கள் இருவரும் இந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.