பரீட்சைகள் திணைக்களத்தின் பாடசாலை அதிபர்களுக்கான வேண்டுகோள்

இந்த முறை தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்கான பரீட்சை சுட்டெண் அடங்கிய சுற்றறிக்கை இதுவரை கிடைக்கப் பெறாத பாடசாலை அதிபர்கள் உடனடியக அறியத் தருமாறு பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிடுகின்றது.

இம்முறை பரீட்சை வரும் ஆகஸ்ட் மாதம் 23ம் திகதி நாடுபூராகவும் உள்ள 2907 மத்திய நிலையங்களில் நடைபெறவுள்ளது.

பரீட்சையில் தோற்றுவதற்காக 340,930 மாணவர்கள் விண்ணப்பித்திருப்பதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான பரீட்சை சுட்டெண் அடங்கிய சுற்றறிக்கை 27ம் திகதி தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன் ஆகஸ்ட் மாதம் 8ம் திகதிக்குள் கிடைக்கப் பெறாத அதிபர்கள் பரீட்சை திணைக்களத்திற்கு அறியத் தருமாறு திணைக்களம் கேட்டுக் கொண்டுள்ளது.

அத்துடன் 011 2 784 208, 0112 784 537 மற்றும் 011 3 188 350 என்ற தொலைபேசி இலக்கங்களினூடாக தொடர்பு கொள்ள முடியும் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டபிள்யூ.என்.ஜே. புஷ்பகுமார தெரிவித்தார்.

Related Posts