இவ்வருடம் கல்விப் பொதுதராதர சாதாரண தரப் பரீட்சையில் தோற்றவுள்ள மாணவர்களில் அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்காத பரீட்சார்த்திகளை உடனடியாக விண்ணப்பிக்குமாறு ஆட்பதிவுத் திணைக்களம் அறிவித்துள்ளது.
மேலும் இம்முறை கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையில் தோற்றவுள்ள சுமார் 3 இலட்சத்து 50 ஆயிரம் மாணவர்கள் தேசிய அடையாள அட்டைக்காக விண்ணப்பித்துள்ளதாக ஆட்பதிவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அத்துடன், 80 சதவீதமான மாணவர்களுக்குத் தேசிய அடையாள அட்டைகள் விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும், இதுவரை கிடைத்த விண்ணப்பங்களுக்கு ஏற்ப விநியோகிக்கப்படாத அடையாள அட்டைகள் இம்மாத இறுதிக்குள் விநியோகிக்கப்படும் எனவும் ஆட்பதிவுத் திணைக்களம் அறிவித்துள்ளது.