பரிதி வட்டம் எறிதல் போட்டியில் ஹார்ட்லி வீரர் ஆனந்த் சாதனை

எம்­பி­லிப்­பிட்டி மகா­வலி விளை­யாட்டு மைதா­னத்தில் நடை­பெற்­று­வரும் றிட்ஸ்­பறி சேர் ஜோன் டார்பர்ட் கனிஷ்ட மெய்­வல்­லுநர் போட்­டி­களில் பருத்­தித்­துறை ஹார்ட்லி கல்­லூ­ரியைச் சேர்ந்த பாலச்­சந்­திரன் ஆனந்த் 14 வய­துக்­குட்­பட்ட ஆண்­க­ளுக்­கான பரிதி வட்டம் எறி­தலில் புதிய சாதனை நிலை­நாட்­டி­யுள்ளார்.

balachchantheran-ananth

இவர் பரி­தியை 37.33 மீற்றர் தூரம் எறிந்து புதிய சாத­னையை நிலை­நாட்டி தங்கப் பதக்­கத்தை சுவீ­க­ரித்தார்.

கொட்­டாஞ்­சேனை புனித ஆசீர்­வா­தப்பர் கல்­லூ­ரியைச் சேர்ந்த எம். எச். எஸ். டி திசோரா 2008இல் நிலை­நாட்­டிய 29.17 மீற்றர் என்ற சாத­னை­யையே ஆனந்த் முறி­ய­டித்­துள்ளார்.

இதே­வேளை இப் பாட­சா­லையைச் சேர்ந்த முரளி அபிராம் 15 வய­துக்­குட்­பட்ட ஆண்­க­ளுக்­கான பரிதி வட்டம் எறிதல் போட்­டியில் 36.56 மீற்றர் தூரத்தைப் பதிவு செய்து திற­மானப் பெறு­தியைக் கடந்­துள்ளார். இப் போட்டிக்கான திறமானப் பெறுதி தூரம் 28.50 மீற்றர்களாகும்.

Related Posts