பரவிப்பாஞ்சான் மக்கள் மூன்றாவது நாளாகவும் போராட்டத்தில்

கிளிநொச்சியை அண்மித்த பரவிப்பாஞ்சான் பகுதியில் இராணுவ முகாமிற்காக கையகப்படுத்தப்பட்டுள்ள பொதுமக்களின் காணிகளை விடுவிக்க வலியுறுத்தி இன்று மூன்றாவது நாளாகவும் மக்கள் தொடர்ந்து கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதற்கு முன்னரும் பல தடவைகள் இந்த மக்கள் இராணுவ முகாமிற்கு முன்னாள் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இந்தநிலையில் கடந்த 17 ஆம் திகதி அந்த பகுதிக்கு விஜயம் செய்த எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன், பாதுகாப்பு செயலாளருடன் தொலைபேசியூடாக நடத்திய பேச்சுவார்த்தையின் பின்னர் இரண்டு வாரங்களுக்குள் மக்களின் காணிகளை மீளப்பெற்றுக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என வாக்குறுதியளித்திருந்தார்.

இரா. சம்பந்தன் வழங்கிய வாக்குறுதியை அடுத்து, பரவிப்பாஞ்சான் இராணுவ முகாமிற்கு முன்னால் கடந்த 13 ஆம் திகதி சனிக்கிழமை காலை முதல் 17 ஆம் திகதி வரை முன்னெடுக்கப்பட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது.

எவ்வாறாயினும் இதுவரை பொதுமக்களின் காணிகள் விடுவிக்கப்படவில்லை. இதனையடுத்து நேற்று மாலை முதல் 15 குடும்பங்களை சேர்நத மக்கள் இராணுவ முகாமிற்கு முன்னாள் திரண்டு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

எவ்வாறாயினும் நேற்று முன்தினம் பொதுமக்களின் மூன்றரை ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டபோதும் ஆனால் இதுவரை குறித்த அந்த காணிகள் விடுவிக்கப்படவில்லை என மக்கள் கவலை தெரிவித்தனர்.

Related Posts