Ad Widget

பரவிப்பாஞ்சான் காணிகளை விடுவிக்க இராணுவத்தினர் இணக்கம்

பரவிப்பாஞ்சானில் மக்களின் காணியில் முகாம் அமைத்துள்ள இராணுவத்தினர், பிரதேச செயலரால் காணிகள் அடையாளம் காட்டப்படுமிடத்து, அக்காணிகளில் இருந்து தாம் வெளியேற தயாராக இருப்பதாக, தெரிவித்ததாக பரவிப்பாஞ்சான் மக்கள் கூறினர்.

கிளிநொச்சி, பரவிப்பாஞ்சான் மக்கள் காணிகளை விடுவிக்குமாறு தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், வியாழக்கிழமை (23) பிற்பகல் குறித்த பகுதிக்கு இராணுவ உயரதிகாரிக்ள, கரைச்சி பிரதேச செயலாளர், காணிவெளிக்கள உத்தியோகத்தர், போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் உள்ளிட்டவர்கள் இராணுவ முகாமுக்குள் சென்று நீண்ட நேரம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

இதன்போது, காணிகளை அடையாளம் காட்டிய மக்கள் காணியை விரைந்து விடுவித்து தருமாறு கோரினர். பிரதேச செயலரால் காணிகள் அடையாளம் காட்டப்படுமிடத்து, அக்காணிகளில் இருந்து தாம் வெளியேற தயாராக இருப்பதாக, இராணுவத்தினர் தெரிவித்ததாக பரவிப்பாஞ்சான் மக்கள் தெரிவித்துள்ளனர்.

எனினும் காணிகள் விடுவிக்கப்படும்வரை தாம் தொடர் பொராட்டத்தினை முன்னெடுக்க உள்ளதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

Related Posts