பரபரப்பான ஆட்டத்தில் இந்தியா வெற்றி! தொடரையும் கைப்பற்றியது

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஒடிசா மாநிலத்தில் உள்ள கட்டாக்கில் நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பீல்டிங் தேர்வு செய்தது.

இதனையடுத்து விளையாடிய இந்திய அணி யுவராஜ் சிங்(150) மற்றும் டோனி(134) ஆகியோரின் அபார சதத்தால் 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 381 ரன்கள் குவித்தது.

பின்னர் 382 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் இங்கிலாந்து அணி விளையாட தொடங்கியது. ஆனால் அந்த அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 366 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் பரபரப்பான ஆட்டத்தில் 15 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.

இங்கிலாந்து அணியில் ராய் 82(73), மோர்கன் 102(81), மொயின் அலி 55(43) ஆகியோர் அபாரமாக விளையாடி ரன் குவித்தனர். இந்திய அணி தரப்பில் அஸ்வின் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இந்த வெற்றியின் மூலம் 3 ஆட்டங்கள் கொண்ட தொடரில் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.

ஆட்டத்தின் சிறப்பாட்டக்காரராக யுவராஜ் சிங் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

Related Posts