பரபரப்பான ஆட்டத்தில் இந்தியா 6 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வி

இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி டெல்லியில் உள்ள பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்றது.

matt-henry-helps-hardik-pandya

டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் டோனி பீல்டிங் தேர்வு செய்தார். அதன்படி முதலில் களம் இறங்கிய நியூசிலாந்து கேன் வில்லியம்சனின் சதத்தால் 242 ரன்கள் சேர்த்தது.

பின்னர் 243 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களம் இறங்கியது. 31.1 ஓவரில் 139 ரன்கள் எடுப்பதற்குள் இந்தியா ஐந்து விக்கெட்டுக்களை இழந்தது. 6-வது விக்கெட்டுக்கு டோனியுடன் அக்சார் பட்டேல் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி ஓரளவிற்கு நிலைத்து நின்று விளையாடியது.

போட்டி சீராக சென்று கொண்டிருந்த நிலையில் டோனி 39 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். அதனைத் தொடர்ந்து அக்சார் பட்டேல், மிஸ்ரா ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். இதனால் இந்தியா 40.5 ஓவரில் 183 ரன்கள் எடுப்பதற்குள் 8 விக்கெட்டுக்களை இழந்தது.

9-வது விக்கெட்டுக்கு ஹர்திக் பாண்டியாவுடன் உமேஷ் யாதவ் ஜோடி சேர்ந்தார். அப்போது இந்தியாவின் வெற்றிக்கு 55 பந்தில் 60 ரன்கள் தேவைப்பட்டது. இந்த ஜோடி நம்பிக்கையுடன் விளையாடியது. இதனால் ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. பாண்டியா சிறப்பாக விளையாடி ரன்கள் சேர்த்துக் கொண்டிருந்தார். அதேவேளையில் உமேஷ் யாதவ் விக்கெட் விழாமல் பார்த்துக் கொண்டதுடன் தன் பங்குக்கு ரன்களும் சேர்த்து வந்தார். இவர்கள் ஆட்டத்தைப் பார்க்கும்போது இந்தியா வெற்றிபெறும் நிலையில் சென்றது.

8 பந்திற்கு 11 ரன்கள் தேவையிருக்கும்போது பாண்டியா எதிர்பாராத விதமாக அவுட் ஆனார். அவர் 32 பந்தில் 3 பவுண்டரியுடன் 36 ரன்கள் சேர்த்தார். இதனால் கடைசி விக்கெட்டுக்கு 7 பந்தில் 11 ரன்கள் தேவைப்பட்டது. கடைசி ஓவரில் இந்தியாவின் வெற்றிக்கு 10 ரன்கள் தேவைப்பட்டது. முதல் இரண்டு பந்தில் இந்தியா 3 ரன்கள் எடுத்தது. 3-வது பந்தில் பும்ப்ரா க்ளீன் போல்டானார். இதனால் இந்தியா 49.3 ஓவரில் 236 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆகி 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. நியூசிலாந்து அணியின் சவுத்தி 3 விக்கெட்டும், போல்ட் மற்றும் கப்தில் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

ஐந்து போட்டிகள் கொண்ட தொடர் 1-1 என சமநிலையில் உள்ளது. 3-வது போட்டி மொகாலியில் 23-ந்தேதி நடக்கிறது.

Related Posts