பயணிகள் போக்குவரத்து பஸ் சாரதிகள் விசேட அனுமதிப் பத்திரம் ஜூலை 0 1 முதல் கட்டாயம்

பயணிகள் போக்குவரத்து பஸ்களில் சாரதிகளாக உள்ளவர்கள் பயணிகள் தொடர்பாக போக்குவரத்து திணைக்களத்தினால் பயிற்சியின் பின் வழங்கப்பட்ட அனுமதிப் பத்திரத்தை வைத்திருப்பது கட்டாயம் எனவும், இது தொடர்பான சட்டம் ஜூலை 01 ஆம் திகதி முதல் அமுலுக்கு வருவதாகவும் போக்குவரத்துப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தினால் இவ்வருடத்தில் புதிதாக இந்த சட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுவரையில் இரு நாட்கள் கொண்ட பயிற்சியை முடித்துக் கொண்ட 17 ஆயிரம் சாரதிகள் நாட்டில் உள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related Posts