பயணக் கட்டுப்பாடுகள் எதிர்வரும் 31 ஆம் திகதி, ஜூன் 4 ஆம் திகதிகளில் நீக்கப்படாது

தற்போது அமுலில் உள்ள பயணக் கட்டுப்பாடுகள் எதிர்வரும் 31 ஆம் திகதி, ஜூன் 4 ஆம் திகதிகளில் நீக்கப்படாது எனவும் ஜூன் 7 மாதம் அதிகாலை 4 மணி வரை தொடரும் என இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திரசில்வா அறிவித்துள்ளார்.
அத்தியவசிய பொருட்களை வீடுகளுக்கே விநியோகிக்க மாவட்ட செயலாளர் அலுவலகங்கள் மற்றும் பிரதேச செயலகங்கள் ஊடாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது
ஒவ்வொரு பிரதேச செயகப்பிரிவிலும் அத்தியாவசியப்பொருட்கள் எரிவாயு மருந்து மற்றும் உணவு விநியோகத்திற்கு குறிப்பிட்ட சில நிறுவனங்களுக்கும் நபர்களுக்கும் பிரத்தியேக அனுமதி வழங்கி வைக்கப்பட்டுள்ளது. அவர்களால்  மக்களின் தேவைகளுக்கு ஏற்ப வீடுகளுக்கு விநியோகம் மேற்கொள்ளப்படும்
இதேவேளை
அரச உத்தியோகத்தர் அல்லாத அன்றாட வருமானம் அற்ற மக்களுக்கு எதிர்வரும் வாரம் முதல் ரூ.5,000 கொடுப்பனவினை மீளவும் பெற்றுக் கொடுக்க தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

Related Posts