பம்பலப்பிட்டியில் எரிபொருளுக்காக காத்திருந்தவர் உயிரிழப்பு!!

கொழும்பு – பம்பலப்பிட்டி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருள் பெற்றுக்கொள்வதற்காக வரிசையில் காத்திருந்த ஒருவர் இன்று (07) உயிரிழந்துள்ளார்.

வரிசையில் காத்திருந்த குறித்த நபர் திடீர் சுகயீனமுற்று கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் 62 வயதுடைய புத்தளம் பிரதேசத்தைச் சேர்ந்த நபர் ஒருவராவார்.

சம்பவங்கள் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Related Posts