பப்புவா நியு கினியில் உள்ள ஆஸ்திரேலிய தடுப்புமுகாமில், தாங்கள் எதிர்நோக்கும் நிலைமைகளைக் கண்டித்து தஞ்சக் கோரிக்கையாளர்கள் இரண்டு கூடாரங்களுக்குள் முடங்கியிருந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனிடையே, மனுஸ் தீவு தடுப்புமுகாமில் நடக்கும் போராட்டம் வன்முறையாக மாறியுள்ளதாக வெளியாகியுள்ள தகவல்களை ஆஸ்திரேலிய அதிகாரிகள் மறுத்துள்ளனர்.
தொடர்ந்தும் நூற்றுக்கணக்கான தஞ்சக் கோரிக்கையாளர்கள் மனுஸ் தீவு முகாமில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
2013-ம் ஆண்டில் கைச்சாத்தான உடன்படிக்கையின்படி, ஆஸ்திரேலியாவிடம் தஞ்சம்கோரி வருவோரை குடியமர்த்துவதற்கு பப்புவா நியு கினிக்கு பல மில்லியன் டாலர்கள் நிதி வழங்கப்பட்டுள்ளது.
ஆனால், அங்கு எவரும் இதுவரை மீளக்குடியமர்த்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.