பனை மற்றும் தென்னையிலிருந்து கள்ளை பெற்றுக்கொள்ள அனுமதிப்பத்திரம்

பனை மற்றும் தென்னையிலிருந்து கள்ளை சீவுவதற்கு அனுமதிப்பத்திரம் அவசியம் என நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

இது குறித்த மதுவரி திணைக்கள கட்டளைச்சட்டத்தின் 15 ஆவது பிரிவில் (பாகம் 52) திருத்தம் மேற்கொள்ள அமைச்சரவை அனுமதியளித்துள்ளது. இதற்கமைய தென்னை, பனை மரங்களிலிருந்து கள்ளை எடுப்பதற்கு மதுவரி திணைக்களத்தின் அல்லது உரிய பிரதேச செயலாளர் அலுவலகத்தில் அனுமதிப்பத்திரம் பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இதேவேளை கித்துள் மரத்திலிருந்து கள்ளை பெற்றுக்கொள்ள அனுமதிப்பத்திரம் அவசியமில்லை என நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

மதுவரி கட்டளைச் சட்டத்தின் கீழ், இதற்கு முன்னர் கள்ளை சீவுவதற்கு அனுமதிப்பத்திரம் வலியுறுத்தப்பட்டிருந்த போதிலும், கடந்த 2013 இல் இச்சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டு அனுமதிப்பத்திரத்தின் அவசியம் நீக்கப்பட்டிருந்தது. தென்னை மற்றும் பனை மரங்களிலிருந்து கள் இறக்க மதுவரி திணைக்களத்திடமோ அல்லது பிரதேச செயலகத்திடமோ அனுமதிப்பத்திரத்தைப் பெற்றுக்கொள்வது கட்டாயமானதாகும்.எனினும் அனுமதிப்பத்திரம் பெற்றுக்கொள்வது அவசியமில்லை என்றவாறு கடந்த 2013 ஆம் ஆண்டில் சட்டத் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

மதுசார உற்பத்தி நிலையத்துக்கு கள்லை போதுமானளவு பெற்றுக்கொள்வதை கணக்கிடுவதற்கு மதுவரி திணைக்களத்திடம் முறைமையொன்று காணப்படவில்லை.

இதனால் கள் உற்பத்தி நிலையங்கள் ஊடாக மதுவரித் திணைக்களத்துக்கு கிடைக்கும் வருமானம் தொடர்பில் சரியாக கணக்கிடும் முறைமையொன்றும் இருக்கவில்லை

இதன் காரணமாக மதுவரியால் அரசாங்கத்துக்கு கிடைக்கும் வருமானத்தை உறுதிப்படுத்திக்கொள்ளவும் முடியாதிருந்ததாக நிதி அமைச்சு தொவித்துள்ளது.

Related Posts