பனையை மோதி தள்ளியது பேருந்து; 20 பேர் படுகாயம்

accidentகொழும்பில் இருந்து யாழ் நோக்கிச் பயணித்த பயணிகள் பேருந்து ஒன்று இன்று அதிகாலை மிருசுவில் பகுதியில் விபத்துக்குள்ளானதில் 20 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

படுகாயம் அடைந்தவர்கள் யாழ் போதனா வைத்தியசாலை மற்றும் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கொடிகாமத்திற்கும் மிருசுவிலுக்கும் இடைப்பட்ட பகுதியில் வீதிக்கு அருகில் இருந்த பனையுடன் மோதியமையாலயே இவ் விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related Posts