பனம்பொருள் உற்பத்தி பயிற்சி நிலையங்கள் திறப்பு; அல்லைப்பிட்டி, புங்குடுதீவில்

அல்லைப்பிட்டி மற்றும் புங்குடுதீவு பகுதிகளில் பனம் பொருள் உற்பத்தி பயிற்சி நிலையங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளன என்று பனை அபிவிருத்திச் சபையின் தலைவர் பசுபதி சீவரெத்தினம் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையத்தில் பனம் பொருள்களில் இருந்து கைப்பணிப் பொருள்களைத் தயாரிப்பதற்கான மூலப் பொருள்களைப் பெறுவதற்கான உதவிகளைக் கரித்தாஸ் நிறுவனம் வழங்கியுள்ளது.

இந்தப் பயிற்சி நிலையத்தில் உற்பத்தி செய்யப்படும் கைப்பணிப் பொருள்களைச் சந்தைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்தப் பயிற்சி நிலையத்துக்கு 40 பயிற்சியாளர்கள் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர் என்று அவர் மேலும் கூறினார்.

Related Posts