பனம்பொருள் உற்பத்தியில் அழகு சாதனப் பொருள்கள்!

facial-expressions-பனம் உற்பத்திப் பொருள்களில் இருந்து அழகு சாதன உற்பத்திகளைத் தயாரித்து அதனை வெகுவிரைவில் சந்தைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பனை அபிவிருத்திச் சபை எடுத்து வருவதாக பனை அபிவிருத் திச் சபையின் தலைவர் பசுபதி சீவரத்தினம் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

கடந்த காலங்களில் எமது முன்னோர்களால் பனம் பொருள்கள் அழகு சாதனப் பொருள்களாகவும், மருந்துப் பொருள்களாகவும் பயன் படுத்தப்பட்டு வந்தன. எனினும் நவீன மாற்றங்களுக்கு ஏற்ப அவை ஒரு காலத்தில் கைவிடும் நிலைக்கு வந்துள்ளது.

இதனால் பனம் பொருள்கள் ஊடாகக் கிடைக்கக் கூடிய நன்மைகளை இழக்க நேரிட்டுள்ளது. இதனை மீளப் பயனடையச் செய்யும் நோக்குடன் சவர்க்காரம், முகப்பூச்சு(கிறீம்), சம்போ, பற்பசை போன்ற அழகு சாதனப் பொருள்களைத் தயாரித்து விற்பனை செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதற்கான ஆய்வுகள் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன. பனம் பொருள்களை உற்பத்தி செய்யும் உற்பத்தியாளர்கள் மத்தியில் இதற்கான பயிற்சிகளை வழங்கி அவற்றை தயாரித்து அவர்களாகவே விற்பனை செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

பனை அபிவிருத்திச் சபை இந்தத் திட்டத்தை வெகு விரைவில் நடைமுறைப் படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Related Posts