பந்துவீச்சாளர்களுக்கு ஏற்பட்ட உபாதையின் காரணமாகவே இலங்கை அணி தோல்வியுற்றது

இங்கிலாந்து தொடரில் பந்துவீச்சாளர்களுக்கு ஏற்பட்ட உபாதையின் காரணமாகவே இலங்கை அணி தோல்வியை தழுவியதாக இலங்கை கிரிக்கெட் அணி தலைவர் அஞ்சலோ மெத்யூஸ் தெரிவித்தார்.

jeya-mendes

இங்கிலாந்து கிரிக்கெட் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு நாடு திரும்பிய இலங்கை அணி,இங்கிலாந்து தொடர் குறித்து இலங்கை கிரிக்கெட் சபையில்

நடந்த ஊடகவியலாளர் சந்திப்பிலே மேற்கண்டவாறு மெத்யூஸ் தெரிவித்தார்.

இங்கிலாந்து சுற்று பயணத்தின் போது இலங்கை அணியின் சில வீரர்கள் தங்களின் திறன்களை மேலும் வலுவூட்டிக் கொண்டனர். அதில் தினேஷ் சந்திமால், தனுஷ்க குணதிலக மற்றும் குஷல் மென்டிஸ் ஆகியோர் அடங்குவதாக தெரிவித்தார்.

மேலும் குறிப்பிடுகையிலே,

தோல்வி காரணங்கள் கூறி மட்டும் இந்த தோல்வியில் இருந்து எம்மால் தப்பமுடியாது என்றும் கூறினார். குறித்த தொடரில் நாம் தோல்வியை தழுவியது மிகவும் வேதனை தருகின்றது.

பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயற்பட்ட வேளையில் துடுப்பாட்டத்தில் நாம் சிறப்பாக செயற்பட முடியாமல் போன அதேவேளையில், துடுப்பாட்டத்தில் சிறப்பாக செயற்பட்ட வேளையில் பந்துவீச்சில் நாம் எமது திறமையினை சிறப்பாக வழங்க முடியாமல் போனது. ஒரு அணியாக எங்களின் திறமையினை வெளிப்படுத்த முடியாமல் போனதிற்கு மனவருந்துகின்றோம்.

நடுவரின் தீர்ப்பு

இருபதுக்கு 20 போட்டியின் பட்லரின் ஆட்டமிழப்பை தந்திருந்தால் நாம் வெற்றியீட்ட வாய்ப்பிருந்தது. அங்குள்ள சட்டத்திட்டங்களுக்கு மீறி எங்களால் எதுவும் செய்யமுடியாது. தலைவர் என்ற ரீதியில் ஜ.சி.சி க்கு தொடர் குறித்து அனுப்பு ஆவணங்களில் இது குறித்து முறைப்பாடு செய்யமுடியும். இருபதுக்கு 20 போட்டியில் மீள்பரிசீலினை செய்யும் வாய்ப்பு இல்லை. எதிர்காலத்தில் நடைமுறை படுத்தப்படுமா என்று எம்மால் கூறமுடியாது. எங்களால் அந்த ஆட்டமிழப்பை பற்றி முறைப்பாடு மட்டுமே செய்ய முடியும்.

2019 உலககிண்ணம்

எங்கள் முக்கிய நோக்கம் 2019 ஆண்டில் நடைபெறவுள்ள உலககிண்ணத்திற்கான சிறந்த அணியொன்றை அமைத்து கொள்வதேயாகும்.நாம் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம். அனுபவ வாய்ந்த மற்றும் இள வீரர்களை கொண்ட சமநிலை அணியினை உருவாக்குவதே எங்கள் திட்டமாகும்.

அவுஸ்திரேலியா சுற்றுபயணம்

அவுஸ்திரேலியா அணி மிகவும் சிறந்த ஒரு அணி இருந்தாலும் நாங்கள் பின்னடையாது அவர்களுடன் போட்டிபோட தயாராகுவதே எங்கள் எண்ணம். அவுஸ்திரேலியா சுற்றுபயணத்திற்கு செல்லவுள்ள அணியினை இன்னும் நாங்கள் தெரிவு செய்யவில்லை. விரைவில் அணியினை தெரிவு செய்து பயிற்சிகளை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளோம்.

அவுஸ்திரேலியா தொடரில் டில்சான் விளையாடுவது குறித்து இன்னும் உறுதி செய்யப்படவில்லை. அவ்வாறு உறுதி செய்யப்பட்டால் நடுத்தர துடுப்பாட வீரராக டில்சானின் அனுபவத்தின் மூலம் நாங்கள் நல்ல பயனை பெறமுடியுமென எண்ணுகின்றோம்.மேலும், ஆரம்ப வீரராக களமிறங்கும் குசாலினால் நடுத்தர வீரராக செயற்பட முடியுமென நாங்கள் எண்ணவில்லை.ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களின் மாற்றமேற்கொள்ளாமல் அவரை மூன்றாவது துடுப்பாட்ட வீரராக களமிறங்க எண்ணியுள்ளோம்.

மேலும், உபுல் தரங்க ஆறாவது துடுப்பாட்ட வீரராகவே இனி தொடர்ந்து களமிறக்க திட்டமிட்டுள்ளோம். சிலவேளையில் போட்டிகளின் நிலவரத்தினை கொண்டு அவரை களமிறக்குவதில் சில மாற்றங்கள் அச்சமயத்தில் மேற்கொள்ளப்படலாமென கிரிக்கெட் தெரிவுக்குழுவின் தலைவர் சனத் ஜயசூரிய தெரிவித்தார்.

Related Posts