பத்து முரளிகள் பந்துவீசினாலும் அவுஸ்திரேலியாவை வீழ்த்தும் இலங்கை

பத்து முத்தையா முரளிதரன்கள் வந்து பந்து வீசினாலும் அதற்கு தாக்கு பிடிக்க கூடியவாறு இலங்கை அணியை தயார் செய்வோம் என இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர் திலங்க சுமதிபால தெரிவித்துள்ளார்.

murali-thilanka-sumathubala

நேற்று (24) ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

முரளிதரன் அவுஸ்திரேலியா அணிக்கு பயிற்சி அளிப்பது அவரது தொழில் ரீதியாக சரியானதாகவே காணப்படுகின்றது.

எனினும் சொந்த நாட்டிற்கு எதிராக தனது மண்ணில், அதுவும் அவரது சொந்த இடமான கண்டியில் அவுஸ்திரேலிய அணிக்கு சுழல் பந்து பயிற்சி அளிப்பதானது எமது இதயம் உடைவது போல் இருக்கின்றது என அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் முரளிதரன் தொடர்பாக இரண்டு முறைப்பாடுகள் இலங்கை கிரிக்கெட் சபைக்கு கிடைக்கப்பெற்றுள்ளது.

இலங்கை அணியின் முகாமையாளர் சரித் சேனாநாயக்கவை திட்டியமைக்காக முரளிதரனுக்கு எதிராக முறைப்பாடொன்று கிடைக்கப்பெற்றுள்ளது. இதேவேளை அனுமதியில்லாமல் பல்லேகலை மைதானத்தில் பயிற்சியை மேற்கொண்டது தொடர்பில் முறைப்பாடடொன்று கிடைத்துள்ளதோடு, அதனை அவுஸ்திரேலியா கிரிக்கட் சபைக்கு அறிவித்துள்ளதாகவும் திலங்க சுமதிபால தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் நடைபெறவிருக்கும் டெஸ்ட் போட்டியில் பத்து முரளிகள் கொண்டு பந்து வீசினாலும் அவுஸ்திரேலியாவை இலங்கை அணி வீழ்த்தும் என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இதேவேளை இன்று ஆரம்பமாகியுள்ள இலங்கை அவுஸ்திரேலிய போட்டியில் டாஸ் வேன்று முதலில் துடுப்பெடுத்தாடும் இலங்கை அணி 5 விக்கெட்டுக்களை இழந்து 84 ஒட்டங்களை மாத்திரம் பெற்று தடுமாறிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Capture

Related Posts