யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் வலம்புரி பத்திரிகை விநியோகப் பணியில் ஈடுபட்டிருந்தவரை வழிமறித்த கும்பல் ஒன்று, அவரை வாளால் வெட்டிவிட்டு அவர் பயணித்த மோட்டார் சைக்கிளை பறித்துச் சென்றுள்ளது.
இந்தச் சம்பவம் இன்று அதிகாலை 4 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
கோண்டாவிலைச் சேர்ந்த பாலச்சந்திரன் மதனகரன் (வயது -43) என்பவரே வாள்வெட்டுக்கு இலக்காகி தெல்லிப்பழை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
கொள்ளைக் கும்பல் ஒன்றே இவ்வாறு வாளாள் வெட்டிவிட்டு அவரது மோட்டார் சைக்கிளை அபகரித்துச் சென்றுள்ளது என்று சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர்.