பல்வேறு காரணங்களினால் இதுவரையில் பதிவு செய்யப்படாதுள்ள மோட்டார் சைக்கிள்களை பதிவு செய்வதற்கு 4 மாத கால அவகாசத்தை வழங்குவதற்கு மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் ஜகத் சந்திரசிறி அறிவித்துள்ளார்.
இந்த அவகாச காலம் இன்று (03) முதல் ஆரம்பமாகி எதிர்வரும் 2017 ஜனவரி வரையில் நடைமுறையில் இருக்கும் எனஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தக் காலத்துக்குள் 450 வேகம் கொண்ட இன்ஜின்களையுடைய மோட்டார் சைக்கிள்களும் பதிவு செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
பதிவு செய்வதற்குரிய சகல ஆவணங்களும் எடுத்துவரப்படல் வேண்டும் எனவும் கேட்கப்பட்டுள்ளது. மேலதிக தகவல்களை 011-5363592 எனும் இலக்கத்துடன் தொடர்புகொண்டு பெற்றுக் கொள்ள முடியும் எனவும் மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் கூறியுள்ளார்