தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்றக்குழு எதிர்கட்சியின் பிரதமகொறடா பதவியை மக்கள் விடுதலை முன்னணியிற்கு கையளிக்க தீர்மானம் எடுத்திருக்கின்றது. இதனடிப்படையில் எதிர்க்கட்சித் தலைவரும் கூட்டமைப்புத் தலைவருமான இரா.சம்பந்தன் எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவாக மக்கள் விடுதலை முன்னணியின் அநுரகுமார திஸாநாயக்கவை பிரேரிப்பதாக கதாநாயகரிடம் கூறியுள்ளார். இரா.சம்பந்தன் வருகை தராத சந்தர்ப்பத்தில் இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைவரான மாவை சேனாதிராஜா எதிர்கட்சித்தலைவராக செயற்படுவார் என தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்றக்குழு மேலும் தீர்மானம் எடுத்திருக்கின்றது என தமிழ்த்தேசியக்கூட்டமைப்பினால் சற்று முன்னர் வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது .
Press release
The Tamil National Alliance (TNA) Parliamentary Group has decided to hand over the post of Opposition Whip to the Janatha Vimukthi Peramuna (JVP). Accordingly, Leader of the Opposition and TNA Leader Hon. R. Sampanthan proposed to the Speaker that JVP MP Hon. Anura Kumara Dissanayake be appointed as Opposition Whip. The TNA Parliamentary Group also decided that in the absence of Hon. Sampanthan, President of the Ilankai Thamil Arasu Kadchi (ITAK) Hon. Mavai Senathirajah would act as Leader of the Opposition.