Ad Widget

பதட்டமான நிலையிலும் ஈரான் ஜனாதிபதி இலங்கைக்கு விஜயம்


பல முக்கிய நீர் மற்றும் எரிசக்தி திட்டங்களை திறந்து வைப்பதற்காக இம் மாதம் 24 ஆம் திகதி ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

டயரபா மற்றும் புஹுல்பொல ஆகிய இரண்டு அணைக்கட்டுகளை உள்ளடக்கிய அபிவிருத்தி திட்டம் மற்றும் 25 கிலோ மீற்றர் நீர்ப்பாசன  சுரங்கப்பாதையும்  ஜனாதிபதி திறந்து வைக்கவுள்ளார்.

இந்தத் திட்டத்தில் தலா 60 மெகாவாட் திறன் கொண்ட இரண்டு பெரிய நீர்மின் நிலையங்களும் நிர்மாணிக்கபட்டுள்ளன.

உமா ஓயா பல்நோக்கு திட்டம் இலங்கையில் ஈரானிய நிறுவனங்களின் மிகப்பெரிய தொழில்நுட்ப மற்றும் பொறியியல் சேவை திட்டங்களில்  ஒன்றாக கருதப்படுகிறது.

இந்த திட்டம் இலங்கையின் தென்கிழக்கில் கொழும்பு நகரிலிருந்து 200 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ளது.

5,000 ஏக்கர் விவசாய நிலங்களுக்கான நீர்ப்பாசனத்தை மேம்படுத்துவதும், 145 மில்லியன் கனமீற்றர் நீரினை நீரினை கொண்டு செல்லல், ஒரு வருடத்தில் 290 மெகாவோட்  மின்சாரத்தை உற்பத்தி செய்வதும் இத்திட்டத்தின் நோக்கமாகும்.

மத்திய கிழக்கில் ஈரான் நேரடியாக இஸ்ரேல் மீது வான்தாக்குதல் செய்து பதட்டம் நிலவும் சூழ்நிலையில் ஈரான் சனாதிபதியின் விஜயம் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் பதட்டத்திற்குரியதாகவும் அரசியல் அவதானிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Related Posts