எதிர்வரும் பண்டிகை காலத்திற்கு தேவையான புடவைகளை கொள்வனவு செய்வதை தற்காலிகமாக தவிர்த்துக் கொள்வது கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுப்பதற்கு பெரும் உதவியாக அமையும் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விஷேட வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.
புடவை முதலானவற்றை கொள்வனவு செய்யும் பொழுது சில வேளைகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருக்கும் புடவைகளை தொடுதல், அந்த இடங்களில் ஒன்று கூடுதல் ஆகியவற்றின் மூலம் நோய் பரவக்கூடிய அனர்த்தம் இடம்பெறக் கூடும் என்றும் வைத்தியர் சுட்டிக்காட்டினார்.
இதன் காரணமாக பொது மக்களின் பாதுகாப்பு நடவடிக்கையாக பெரும் எண்ணிக்கையில் பொது மக்கள் கூடும் இடங்களுக்கு செல்வதை தவிரக்குமாறும் வைத்தியர் ஜாசிங்க பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.