போலி கடவுச்சீட்டு மற்றும் போலி விசாக்கள் 50யை எடுத்துகொண்டு இங்கிலாந்துக்கு செல்வதற்காக வருகைதந்த இலங்கை பெண்ணை கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்துள்ளதாக விமான நிலை குற்றப்புலனாய்வு அதிகாரிகள் தெரிவித்தனர்.
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 22 வயதான யுவதியே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
அவர், இலங்கை விமான சேவைக்கு சொந்தான யு.எல்.503 விமானத்தில் இங்கிலாந்துக்கு செல்வதற்காக விமான நிலையத்துக்கு வருகைதந்துள்ளார்.
அவரிடம் போலியான இந்திய கடவுச்சீட்டு மற்றும் அமெரிக்க விசாக்கள் 50 இருந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
சந்தேகநபரிடம் மேற்கொண்ட விசாரணைகளில் அந்த கடவுச்சீட்டு மற்றும் போலியான ஆவணங்களை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து ஒருவரிடமிருந்து பெற்றுகொண்டதாக தெரிவித்துள்ளார்.
சந்தேகநபரிடம் மேற்கொண்ட விசாரணைகளின் பின்னர் அவரை நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக அந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.