பண்டதரிப்பில் காணியை அபகரித்து படைமுகாம் !- வழக்கு தொடர தயாராகும் கூட்டமைப்பு

tellepplai_bundபண்டதரிப்பு காடாப்புலத்தில் 49 ஏக்கர் காணியை அபகரித்து பாரிய படைமுகாம் ஒன்றை அமைக்கும் பணியில் இராணுவத்தினர் ஈடுபட்டு வருவதாக வலி.தென்மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் அ.ஜெபநேசன் குற்றஞ்சுமத்தியுள்ளார்.

நகர பாதுகாப்பு அமைச்சின் அனுமதி உள்ளதாகத் தெரிவித்தே இக்காணிகளை படையினர் அபகரித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் இராணுவத்தினர் கடிதம் ஒன்றை பிரதேச சபையிடம் கையளித்துள்ளது.

இதன்போது காணி வழங்க முடியாது என பிரதேச சபை பதில் அனுப்பியும் இராணுவம் அத்துமீறி படை முகாம் அமைத்து வருகின்றது.

இந்நிலையில் இராணுவத்தின் இந்நடவடிக்கைக்கு எதிராக கூட்டமைப்பின் சார்பில் வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளதாக தவிசாளர் தெரிவித்துள்ளார்.

Related Posts