பணிப்புறக்கணிப்பிற்கு யாழ். மேல் நீதிமன்ற சட்டத்தரணிகள் ஆதரவில்லை

Supreme-Court-buildingயாழ். மேல் நீதிமன்ற சட்டத்தரணிகள் இன்று பணிப்புறக்கணிப்பினை மேற்கொள்ளவில்லை என யாழ்.மேல் நீதிமன்ற சட்டத்தரணிகள் சங்க செயலாளர் மு.ரெமீடியாஸ் நேற்று தெரிவித்தார்.

இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் பணிப்புறக்கணிப்பினை மேற்கொள்ள தீர்மானித்தால் தாமும் ஒத்துழைப்பு வழங்குவோமென்றும் இது வரையில் பணிப்புறக்கணிப்பினை மேற்கொள்ள தீர்மானிக்கவில்லை என்றும் அவர் கூறினார்.

இதேவேளை, மக்களின் தேவைகளையும், அசௌகரியங்களையும் தீர்க்கும் முகமாக பணிப்புறக்கணிப்பினை மேற்கொள்ளவில்லை என்றும் அவர் மேலும் கூறினார்.

Related Posts