பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது!

பணிப்பகிஷ்கரிப்பு நடவடிக்கைகள் காரணமாக நாட்டில் எரிபொருட்களுக்குத் தட்டுப்பாடு ஏற்படாது என பெற்றோலிய வளத்துறை அமைச்சர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார்.

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் உட்பட ஏனைய தொழிற்சங்கங்கள் இன்று (வெள்ளிக்கிழமை) முன்னெடுக்கும் தொழிற்சங்க நடவடிக்கையினால் பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் நடவடிக்கைகளுக்கு எந்தவொரு இடைஞ்சலும் ஏற்பட மாட்டாது. இதனை முகம்கொடுப்பதற்கு அரசாங்கம் தயாராகவுள்ளது.

இன்று நடைபெறும் பணிப்பகிஷ்கரிப்பு நடவடிக்கையில் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் ஊழியர்களில் பெரும்பாலானவர்கள் கலந்துகொள்ளவில்லையெனவும், இதனால், மக்கள் அச்சம்கொள்ளத் தேவையில்லையெனவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related Posts