பணம் உதவி வழங்கிய குற்றச்சாட்டில் யாழில் மூவர் கைது!

நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறி அதிகளவானோரை அழைத்து பணம் உதவி வழங்கிய குற்றச்சாட்டில் மூவர் நெல்லியடி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வதிரி, இரும்பு மதவடியில் இன்று (திங்கட்கிழமை) முற்பகல் இந்தச் சம்பவம் இடம்பெற்றது.

வருமானம் குறைந்த குடும்பங்களுக்கு இந்தப் பண உதவி வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டதையடுத்து, நூற்றுக்கணக்கானோர் வரிசையில் திரண்டனர்.

இந்த நிலையில், சம்பவம் தொடர்பாக அறிந்த நெல்லியடிப் பொலிஸார், அங்கு சென்று பண உதவி வழங்கியவர் உட்பட மூவரைக் கைது செய்தனர்.

அத்தோடு, சம்பவம் தொடர்பான மெலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

Related Posts