பணத்தின் மோகத்தால் அழிந்துபோகும் ஆன்மீகம்

தற்போது மக்களுடைய கைகளில் பணம் அளவுக்கதிகமாக புழங்குவதன் காரணமாக ஆன்மீகத்திலிருந்து தூர விலகி லௌகீக வாழ்க்கை வாழும் காலம் வந்து விட்டது என்று ,வடமாகாண பிரதம செயலாளர் பத்திநாதன் தெரிவித்துள்ளார்.

இன்று 23ஆவது நல்லைக்குமரன் மலர் வெளியீட்டு நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,

துன்பம் வரும்போது கடவுளை நாடுவதும்,இன்பம் வரும் போது கடவுளை மறப்பதுமே மனிதப்பண்பாகிவிட்டது.

குறிப்பாக அரச அலுவலர்கள் தாமுண்டு தம்வேலையுண்டு என்று இருப்பது வழமை ஆனால் இவ்வாறு 23 ஆண்டாக நல்லைக்குமரன் மலர் வெளியீட்டு வைபவத்தை நிகழ்த்த யாழ்.மாநகர சபை தொடர்ந்தும் பாடுபட்டு வந்துள்ளதையிட்டு நாம் பெருமையடைகிறேன்.

23ஆண்டாக நல்லைக்குமரன் மலர் வரலாற்றை பார்க்கும் போது அதிசயமாகள்ளது.அதாவது யாழ்.மாநகர சபைக்கு பல ஆணையாளர்கள் வந்தார்கள் ஓய்வு பெற்றுச் சென்றார்கள்,ஆனால் நல்லைக்குமரன் மலர் வருடா வருடம் வெளியிடப்படுவது என்பது வரவேற்கத்தக்க விடயம் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Related Posts