பட்டப்பகலில் பெண் குத்திக் கொலை! நகை பணம் என்பன கொள்ளை

murderபட்டப்பகலில் வயோதிப் பெண்ணொருவர் குத்திக் கொலை செய்யப்பட்டதோடு, அவர் அணிந்திருந்த நகை மற்றும் பணம் என்பன அபகரிக்கப்பட்டுள்ளன.

திங்கட்கிழமை வல்வெட்டித்துறை பாவிலி வீதியில் உள்ள வீடொன்றில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதில் சோதிலிங்கம் தெய்வமலர் வயது 64 என்ற வயோதிப பெண்ணே உயிரிழந்தவராவார்.

ஏழு பிள்ளைகளின் தாயாரான இவர் தனது கடைசி மகளுடன் வசித்து வந்துள்ளார். நேற்று மகள் வெளியே சென்றுள்ள நிலையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில் வீட்டிற்கு வந்த உறவினரொருவர் இவர் இரத்த வெள்ளத்தில் கிடப்பதை கண்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் வல்வெட்டித்துறைப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Posts