பட்டதாரி போட்டிப் பரீட்சைக்காக விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன!

வடமத்திய மாகாணப் பாடசாலைகளில் நிலவும் விஞ்ஞானம் கணிதம் ஆங்கிலம் சங்கீதம் (கீழைத்தேய) நாட்டியம், சிற்பம், சித்திரம், தகவல் தொழில்நுட்பம், றோமன் கத்தோலிக்க ஆரம்ப மற்றும் வெளிநாட்டு மொழிகள் ஆகிய பாடங்களுக்கு காணப்படும் பட்டதாரிகளை இணைத்துக் கொள்வதற்கான போட்டிப் பரீட்சைக்காக விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

வடமத்திய மாகாணத்தில் மூன்று வருடங்களுக்கு குறையாத நிரந்தர வதிவிடத்தையும், 18 வயதிற்கும் 35 வயதிற்கும் இடைப்பட்ட பல்கலைக்கழக பட்டத்தினை பூர்த்தி செய்தவர்கள் இதற்காக விண்ணப்பிக்க முடியும்.

வெற்றிடங்கள் காணப்படும் அநுராதபுரம் மாவட்டத்திலுள்ள கெகிராவ, தமுத்தேகம, கலென்பிந்துனுவ, கெப்பிதிகொலாவ, அனுராதபுரம் ஆகிய கல்வி வலயங்களிலும் பொலன்னறுவை மாவட்டத்தில் திம்புலாகல, பொலன்னறுவை, ஹிங்குரன் கொட, ஆகிய கல்வி வலயங்களில் காணப்படும் ஆசிரிய வெற்றிடங்களுக்கேற்ப போட்டிப் பரீட்சைகளின் இரு பாடங்களிலும் 40 புள்ளிகளுக்கு மேல் ஒவ்வொரு பாடங்களிலும் பெற்றவர்கள் நேர்முகப்பரீட்சைக்கு அழைக்கப்பட்டு அதன் பின்னர் நியமனம் வழங்கப்படவுள்ளது.

இதற்கான விண்ணப்ப படிவங்களை இம்மாதம் 25 ஆம் திகதிக்கு முன்னர் பரீட்சைக் கட்டணமாக 500 ரூபா பணம் செலுத்தி அனுப்புதல் வேண்டும்.

Related Posts