தேர்தல் பரப்புரை நடவடிக்கைகளில் பட்டதாரிப் பயிலுநர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள் ஆளும் தரப்பினரால் பலவந்தமாக ஈடுபடுத் தப்பட்டுள்ளமை தொடர்பான முறைப் பாடுகளையடுத்து தேர்தல்கள் ஆணையாளரால் அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பட்டதாரிப் பயிலுநர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள் மூன்று வேளை பிரதேச செயலகத்தில் கையோப்பம் இட வேண்டும் என்று தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய அறிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் அமைச்சர்கள், வேட்பாளர்களினால் சமுர்த்தி உத்தியோகத்தர்கள், பட்டதாரிப் பயிலுநர்கள் கட்டாயப்படுத்தப்பட்டு தேர்தல் பரப்புரையில் ஈடுபட வைக்கப்பட்டுள்ளதாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்ச்சியாக குற்றஞ்சாட்டி வந்ததுடன் இது தொடர்பில் தேர்தல்கள் ஆணையாளருக்கும் முறைப்பாடு செய்திருந்தது.
இந்த நிலையில் பிரதேச செயலகங்களுக்கு வெளியே கடமையிலுள்ள சமுர்த்தி உத்தியோகத்தர்கள் பிரதேச செயலகத்துக்கு வந்து மூன்று வேளையும் கையயாப்பம் இட வேண்டும் என்றும் அதே போன்று பட்டதாரிப் பயிலுநர்களும் மூன்று வேளையும் கையயாப்பமிட வேண்டும் என்று அறிவித்துள்ள தேர்தல் ஆணையாளர், அவர்கள் கடமையில் இருப்பதைப் பிரதேச செயலர் உறுதிப்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.