பட்டதாரிப் பயிலுநர் ஆசிரியர்களாக நியமனம் வழங்கப்பட்ட 2,500 பேருக்கு ஆசிரிய சேவையில் நிரந்தர நியமனங்களை வழங்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
மாகாண மட்டத்தில் வெற்றிடம் நிலவும் பாடசாலைகளில் இவர்களுக்கான நியமனங்கள் வழங்கப்படவுள்ளன என்று அமைச்சின் செயலாளர் கோத்தபாய ஜயரத்ன கூறியுள்ளார்.
பட்டதாரி பயிலுநர்களுக்கான நிரந்தர நியமனம் வழங்கும் நடவடிக்கை உரிய நடைமுறைக்கு அமைய மேற்கொள்ளப்படும் என்று அவர் தெரிவித்தார். ஏற்கனவே பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களுக்கு அமைவாக பட்டதாரிப் பயிலுநர்களுக்கு நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
இவர்களுக்கு மாகாண சபைகள் ஊடாகப் பரீட்சை நடத்தப்பட்டு நிரந்தர நியமனம் வழங்கப்படவுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.
தேசிய பாடசாலைகளின் நிர்வாக செயற்பாடுகளை இலகுபடுத்தும் வகையிலும் பயிலுநர் பட்டதாரிகளுக்கு நியமனங்கள் வழங்கப்படவுள்ளன என்று அவர் மேலும் தெரிவித்தார்.