பட்டதாரிப் பயிலுநர்கள் 514 பேருக்கு பொருளாதார அமைச்சில் நியமனங்கள்!

பட்டதாரிப் பயிலுநர்கள் 514பேர் பொருளாதார அபிவிருத்தி அமைச்சுக்கு இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர். இவர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு நேற்று(26.12.2012) யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறு தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு பட்டதாரிப் பயிலுநர்களுக்கான நியமனக் கடிதங்களை வழங்கி வைத்தார்.

இதன்போது உரையாற்றிய அமைச்சர் , நாட்டில் 40,000 பட்டதாரிகளுக்கு அரச நியமனம் வழங்கும் அரசின் திட்டத்தின் கீழ் இவர்கள் உள்வாங்கப்பட்டுள்ளனர் என்றும், இவ்வாறு ஆயிரக்கணக்கில் நியமனம் வழங்கப்படும் போது பட்டதாரிகளின் விருப்பத்திற்கமைய வேலை கிடைப்பது கஷ்டமான விடயம் என்றும் குறிப்பிட்டதுடன், இந்நியமனத்தின் மூலமாக அவர்கள் கிடைத்திருக்கும் சந்தர்ப்பத்தைச் சரியாகப் பயன்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

மேலும், இவ்வாறு நியமனம் பெறுபவர்களுக்கு 2013ஆம் ஆண்டு மூன்று அல்லது நான்கு மாதத்தில் நிரந்தர நியமனம் வழங்கப்படும் எனவும் அமைச்சர் கூறினார்.

Related Posts