பட்டதாரிகளுக்கு தொழில் வழங்குவதற்கான நேர்முகத்தேர்வு பெப்ரவரி ஆரம்பம்!!!

பட்டதாரிகளுக்கு தொழில் வழங்குவதற்கான நேர்முகத்தேர்வு எதிர்வரும் பெப்ரவரி மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளது.

பயணிகள் போக்குவரத்து மின்சக்தி அமைச்சர் மஹிந்த அமரவீர இதனைத் தெரிவித்துள்ளார்.

நாட்டில் 54 ஆயிரம் பட்டதாரிகள் உள்ளதாகவும், அவர்களுக்கு வேலைவாய்ப்பினை பெற்றுத் தரும் பொறுப்பினை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஏற்றுக் கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் வாரமளவில் இவர்கள் அனைவரும் நேர்முகத் தேர்விற்கு அழைக்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் மஹிந்த அமரவீர சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து அவர்களின் எதிர்காலத்திற்கு தேவையான வேலைவாய்ப்பிற்கு ஏற்ப சிறந்த பயிற்சிகள் வழங்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

அனைத்து பட்டதாரிகளினதும் திறமைகளை இனங்கண்டு, அவர்களுக்கு தேவையான பயிற்சியினை அளித்து அவர்களின் கல்வித் திறனை நாட்டின் எதிர்காலத்திற்காக பயன்படுத்தும் வேலைத்திட்டதை முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Posts