பட்டதாரிகளின் போராட்டத்திற்கு வடமாகாணசபையில் கண்டனம்!!!

வடமாகாண சபையின் வாயில் கதவுகளை மூடி மாகாணசபை உறுப்பினர்களை உள்நுழைய விடாமல் பட்டதாரிகள் நடத்திய கவனயீர்ப்பு போராட்டத்திற்கு வடமாகாணசபையில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.



வடமாகாணசபையின் 93ம் அமர்வு நேற்று மாகாணசபையின் பேரவை செயலக சபா மண்டபத்தில் நடைபெற்று வருகிறது.

இதன்போது அவை தலைவர் சீ.வி.கே.சிவஞானம் மற்றும் மாகணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் ஆகியோர் குறித்த சம்பவத்திற்கு கண்டனத்தை கூறியுள்ளனர்.



கடந்த 09.05.2017 அன்று வடக்கு வேலையற்ற பட்டதாரிகள் வடமாகாண சபையின் வாயில்களை மூடி போராட்டம் நடத்தியிருந்தனர்.

இதேவேளை வடமாகாண அமைச்சர்கள் மீது முன் வைக்கப்பட்ட முறைகேட்டு குற்றச்சாட்டுக்கள் குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட விசாரணை குழுவின் இறுதி அறிக்கை தனக்கு கிடைக்க பெற்றுள்ளதாக வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரன் கூறியுள்ளார்.



எதிர்கட்சி தலைவர் சி.தவராசா முதலமைச்சரை நோக்கி எழுப்பிய கேள்விக்கு பதில் வழங்கும் போதே அவர் இதனைக் கூறினார்.

இதுதவிர முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் சில குறுக்கீடுகள் உண்டானமைக்கு வட மாகணசபை சார்பில் தனது வருத்தத்தை தெரிவிப்பதாக அவை தலை வர் சீ.வி.கே.சிவஞானம் இன்று சபையில் கூறினார்.

Related Posts