தேசிய மாணவர் படையணி பயிற்சிக்காக ரந்தம்பை என்னும் இடத்துக்கு கடந்த 7 ம் திகதி அழைத்துச்செல்லப்பட்ட யாழ் மாணவர்கள், அங்கே பயிற்சியில் காட்டிய அதீத திறமையை பார்த்து, சிங்கள மாணவர்களுக்கு ஏற்பட்ட காழ்ப்புணர்ச்சியே கடந்த 12 ம் திகதி யாழ் மாணவர்கள் மீது நடத்திய முதலாவது தாக்குதலுக்கு காரணமாக அமைந்தது.அதன்பின்னர் கடந்த 14 ம் திகதி மதிய உணவு எடுக்க சென்ற யாழ் மத்திய கல்லூரி மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியதில் மாணவன் ஒருவர் தலையில் படுகாயமடைந்தார்.
இவ்விடயம் உடனடியாக ஆசிரியர்களால் உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டும் அவர்களால் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
பதிலடியாக யாழ். மாணவர்களும் சிங்கள மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியதில் பல சிங்கள மாணவர்களும் படுகாயமடைந்தனர்.
இதன்பின்பு யாழ். மாணவர்கள் பேருந்துகளில் ஏற்றப்பட்டனர். ஆனால் யாழ் பரியோவான் கல்லூரி மற்றும் யாழ் மத்திய கல்லூரி மாணவர்களை மட்டும் தண்டனை என்றுகூறி திறந்த வெளி மைதானத்தில் வெயிலில் நீண்டநேரம் நிறுத்தி வைத்தனர்.
இதனால் கொதிப்படைந்த சக யாழ். மாணவர்கள் இவர்களை விடுவிக்காவிட்டால் நாம் யாழ் செல்லமாட்டோம் என்று அடம்பிடிக்கவே நிலைமையின் கொதிநிலையை உணர்ந்த படை அதிகாரிகள் எல்லா மாணவர்களையும் விடுவித்து இவ்விடயம் யாருக்கும் தெரியப்படுத்த கூடாது என்று கூறி யாழ் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.