படுகொலை செய்யப்பட்ட றெஜினாவின் ஆடைகள் கண்டெடுப்பு!!

சுழிபுரத்தில் சிறுமி றெஜினா படுகொலை செய்யப்பட்ட இடத்திற்கு அண்மையில் இருந்து சில ஆடைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக வட்டுக்கோட்டைப் பொலிஸார் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) தெரிவித்துள்ளனர்.

எனினும் குறித்த ஆடைகள் சிறுமி றெஜினாவினுடையது என இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என அவர்கள் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

அத்துடன் குறித்த பகுதிகளில் மோப்ப நாய்களின் உதவியுடன் தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வாரம் கொலை செய்யப்பட்ட நிலையில் சுழிபுரம் பிரதேசத்தில் கிணறொன்றிலிருந்து றெஜினா என்ற சிறுமி சடலமாகக் கண்டெடுக்கப்பட்டிருந்தார்.

இச்சம்பவம் தொடர்பாக மூவர் சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டதுடன், அவர்கள் மேலதிக விசாரணைகளுக்காகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் குறித்த பிரதேசத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ள சிறுமியினுடையவை எனக் கூறப்படும் ஆடைகள் கிராம மக்களிடையே பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts