படுகொலை செய்யப்பட்ட மாணவர்களுக்கு யாழ்.பல்கலையில் அஞ்சலி

கடந்த மாதம் யாழில் பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டிற்கு இலக்காகி உயிரிழந்த யாழ்.பல்கலைக்கழக மாணவர்களான சுலக்ஷன் மற்றும் கஜன் ஆகியோருக்கு, யாழ்.பல்கலைக்கழகத்தில் இன்று அஞ்சலி செலுத்தப்பட்டது.

uni-student

uni-student-2

யாழ்.பல்கலைக்கழக கலைப்பீட மாணவர்களால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த இவ் அஞ்சலி நிகழ்வு, இன்று (திங்கட்கிழமை) நண்பகல் பல்கலைக்கழகத்தின் கைலாசபதி அரங்கில் இடம்பெற்றது.

உயிரிழந்த மாணவர்களுக்கு இதன்போது மலரஞ்சலி இடம்பெற்றதோடு, மெழுகுவர்த்தி ஏற்றியும் அஞ்சலி செலுத்தப்பட்டது. அதன்பின்னர், முறையே மாணவர் ஒன்றிய தலைவர், பதில் துணைவேந்தர் மற்றும் முகாமைத்துவ பீடாதிபதி ஆகியோரின் இரங்கல் உரைகள் இடம்பெற்றன.

யாழ்ப்பாணத்தை உலுக்கிய குறித்த கொலைச் சம்பவம் மக்களிடையே பாரிய அதிர்ச்சியை தோற்றுவித்துள்ள நிலையில், இதுகுறித்த விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Posts