படத்தில் நடிப்பதற்காக குண்டு பெண் ஆனது எப்படி? – அனுஷ்கா

ஆர்யாவுடன் நடிக்கும் ‘இஞ்சி இடுப்பழகி’ படத்துக்காக அனுஷ்கா தனது உடல் எடையை அதிகமாக்கி குண்டு பெண்ணாக மாறினார். படத்துக்காக பிரபல ஹீரோக்கள் தங்கள் உடல் எடையை அதிகமாக்கி கொள்வார்கள். பின்னர் எடையை குறைப்பார்கள். கதாநாயகிகள் அனைவரும் உடலை ஒல்லியாக ஒரே அளவில் வைத்துக் கொள்ளத்தான் விரும்புவார்கள். ஆனால் அனுஷ்கா இதற்கு விதிவிலக்கு ‘இஞ்சி இடுப்பழகி’ படத்தின் பாத்திரத்துக்கு ஏற்ப உடல் எடையை சுமார் 20 கிலோ அதிகமாக்கினார்.

INJI-IDUPPAZHAGI-anushka

முதலில் அவர் குண்டு பெண்ணாக நடித்த படம் வெளியானபோது ‘கிராபிக்ஸ்’ என்று தான் அனைவரும் நினைத்தார்கள். உண்மையாகவே அவர் குண்டான விஷயம் வெளியான போது, ‘மார்க்கெட்டில்’ உள்ள ஒரு நடிகை துணிச்சலாக உடல் எடையை அதிகரித்து இருக்கிறாரே என்று ஆச்சர்யத்தில் வாய் பிளந்தார்கள். இப்போது அவர் மீண்டும் உடல் எடையை குறைத்துள்ளார்.

தமிழ் தெலுங்கில் முக்கிய இடத்தில் இருக்கும் அனுஷ்கா உடல் எடையை அதிகரித்தது எப்படி என்ற ரகசியம் குறித்து சொல்கிறார். நான் இந்த படத்துக்காக என் உடல் எடையை 20 கிலோ அதிகரித்தேன். இதற்காக தினமும் 3 வேளையும் அரசி சோறு, ருசியான கூட்டு, குழம்புடன் சாப்பிட்டேன். இது தவிர மாவு சத்து அதிகம் உள்ள உணவுகளை சாப்பிட்டு வந்தேன். உடற்பயிற்சி செய்வதையும் விட்டு விட்டேன். இதனால் உடல் எடை அதிகமானது.

என்னைப் பார்த்தவர்கள் பயந்து போனார்கள். ஆனால் எனக்கு எடையை குறைக்க முடியும் என்ற நம்பிக்கை இருந்தது. தற்போது ‘பாகுபலி 2’ படத்தில் நடிக்க இருக்கிறேன். இந்த மாத கடைசியில் படப்பிடிப்பு தொடங்குகிறது. இதற்காக மீண்டும் உடல் எடையை குறைத்து வருகிறேன். இதுவரை 7 கிலோ குறைந்து இருக்கிறது. மாவு உணவுகளை குறைத்து, உடற்பயிற்சியை அதிகமாக்கி இருக்கிறேன். படப்பிடிப்புக்கு முன்பு இன்னும் எடையை குறைத்து தயாராகி விடுவேன். என்றார்.

Related Posts