படத்தில் உள்ள நகைகள் எங்கே?? என விசாரணை செய்து, அனைத்து நகைகளையும் அள்ளி சென்ற திருடர்கள்!!

திருமணம் நடைபெற்ற அன்றே வீடு புகுந்து, மணமகளின் தாலிக்கொடி உள்ளிட்ட 60 பவுண் நகைகளை திருடிச் சென்றுள்ளனர் திருடர்கள்.

அதில் அதிர்ச்சி தகவல் என்னவென்றால், திருமண கோலத்தில் எடுத்த புகைப்படத்தை கொண்டு வந்த திருடர்கள், அந்த படத்தில் உள்ள நகைகள் எங்கே என விசாரணை செய்து, அனைத்து நகைகளையும் அள்ளி சென்றுள்ளனர்.

மானிப்பாய் கொத்துக்கலட்டி பகுதியில் (28) நேற்று முன்தினம் இரவு இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

அந்த பகுதியில் நேற்று முன்தினம் திருமண நிகழ்வொன்று இடம்பெற்றது. மணமகள் வெளிநாட்டிலிருந்து வந்திருந்தார்.

அன்றையதினம் இரவு சுமார் ஆறு திருடர்கள் முகத்தை மறைத்தபடி வீடு வந்துள்ளனர். வீட்டிலிருந்தவர்களை மிரட்டி, ஒரு இடத்தில் உட்கார வைத்த திருடர்கள், வீட்டை சல்லடையிட்டு ஒரு தொகை நகைகளை திருடினர்.

பின்னர், திருமண நிகழ்வில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை காண்பித்து, அதிலுள்ள நகைகள் எங்கேயென கேட்டு, வீட்டிலிருந்தவர்களை மிரட்டினர். திருடர்களின் மிரட்டிலிற்கு பயந்து நகைகள் வைக்கப்பட்ட இடங்களை அவர்கள் காண்பிக்க, வீட்டிலிருந்த பெரும்பாலான நகைகளை அவர்கள் அபேஸ் செய்துகொண்டு தப்பிச் சென்றனர்.

சுமார் 60 பவுண் நகைகள், 4 இலட்சம் ரூபா பணம், பெறுமதியான கைத்தொலைபேசிகளை திருடர்கள் திருடியுள்ளனர்.

Related Posts