படக்குழுவினருடன் பேட்மிண்டன் விளையாடிய விஜய்

புலி’ படத்திற்கு விஜய் தனது 59-வது படமாக அட்லி இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக சமந்தா, எமி ஜாக்சன் ஆகியோர் நடித்து வருகின்றனர்.

vijay-batmintion-

இப்படத்தின் படப்படிப்பு சமீபத்தில் சென்னையில் கொட்டிய அடை மழையிலும் தொடர்ந்து நடைபெற்றது. இந்நிலையில், சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்புக்கு இடையில் கிடைத்த நேரத்தில், தனது படக்குழுவினருடன் இணைந்து பேட்மிண்டன் விளையாடினார் விஜய்.

இவ்வளவு பெரிய நடிகர், மிகவும் எளிமையாக படக்குழுவினருடன் இணைந்து பேட்மிண்டன் விளையாடியது படக்குழுவினரை மிகவும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

vijay-batmintion-2

விஜய் நடிக்கும் இந்த புதிய படத்திற்கு ‘தாறுமாறு’ என்று தலைப்பு வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

கலைப்புலி எஸ்.தாணு பிரம்மாண்டமாக தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். பழம்பெரும் இயக்குனர் மகேந்திரன், பிரபு ஆகியோரும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

vijay-batmintion-3

Related Posts