ராமேஸ்வரம் தனுஸ்கோடி அரிசிசல்முனை கடல்பகுதிக்கு வந்து இறங்கிய அகதியை சிறையில் அடைக்க நீதி மன்றம் உத்தரவு இட்டுள்ளது
நேற்று முன்தினம் நள்ளிரவில் ராமேஸ்வரம் அருகே தனுஸ்கோடி அரிசிசல்முனை கடல் பகுதியில் திரிகோணமலைப்பகுதியைச் சேர்நத சத்தியசீலன(50) இவரது மனைவி பரமேஸ்வரி( 41) மகள்கள் மேரி(18) அஞ்சலிதேவி(15)விடுதலைசெல்வி (13) ஆகியோர் மன்னார் மாவட்டம் பேச்சாளைப் பகுதியல் இருந்து இலங்கை பணம் ரூ.50 ஆயிரம் கொடுத்து இலங்கை படகில்வந்து இறங்கினர் இவர்களை அப்பகுதி மீனவர்கள் தனுஸ்கோடி காவல்நிலையத்திற்கு அனுப்பிவைத்தனர் இதனையடுத்து போலீஸார் வழக்குபதிவு செய்து விசாரித்து வந்தனர்
விசாரணையில் இவர்கள் இலங்கையில் உள்நாட்டு போர் காரணமாக கடந்த 1999ல் அகதிகளாய் தமிழக வந்ததாகவும் இவர்கள திருவண்ணாமலை அகதிகள் முகாமில் தங்கவைப்பட்டிருந்த போது கடந்த 2010 ல் சத்தியசீலனுடைய தாயர் இலங்கையில் மரணம் அடைந்ததால் தாயின் இறுதிசடங்கிற்காhக் விமானம் மூலம் இலங்கைக்கு திரும்பிச் சென்றுள்ளார் .பின் அங்கு இவர்களின் நிலங்களை ராணுவம் எடுத்துக் கொன்டாதாலும் பிழைப்பு இன்றி குடும்பத்தாரோடு அவதியுற்று வந்த நிலையில் மீண்டும் இந்தியாவிற்கு செல்லம் நோக்கத்தில் வந்தாதாக தெரியவந்துள்ளது இதனையடுத்து நேற்று இரவு ராமேஸ்வரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்
அகதிகளை விசாரணை செய்த நீதிபதி சரவணக்குமார் சத்தியசீலனை கடவுச்சீட்டு இன்றி இந்தியவிற்கு சட்டவிரேதமாக நுழைந்தவழக்கில் வரும் 30 ந் தேதி வரை சென்னை புழல்சிறையில் அடைக்க் உத்தரவு இட்டார் மேலும் மனைவி பரமேஷ்வரி மற்றும் முத்தமகள் மேரி ஆகியோரை 15 நாட்கள் ஜாமினில்விடுதலை செய்ததோடு இரண்டு பென் குழந்தைகளை பராமிக்கும் நோக்கில் ஜாமினில் விடுவிக்கப்பட்டவர்கள் திருவண்ணாமலை அகதிகள் முகாமில் தங்கியுள்ள அவர்களின் உறவிணர்களுட்ன தங்கவைக்க போலீஸாருக்கு உத்தரவு இட்டதையடுத்து 4 பேரையும் போலீஸார் முகாமிற்கு அனுப்பிவைத்தனர்